கோவை மாநகராட்சி 92-வது வார்டுக்கு உட்பட்ட சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிட்கோ சாலையில் கால்வாய் மூடி திறந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக இரவில் அந்த வழியாக செல்பவர்கள் கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தை விளைவிக்கும் வகையில் திறந்து கிடக்கும் கால்வாயை உடனடியாக மூடி வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.