தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

Update: 2026-04-26 17:55 GMT

திருச்சி உறையூர் பாத்திமா நகர், நேதாஜி தெரு பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால்கள் தற்போது தூர்ந்துபோன நிலையில் அங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்