சாலையில் தேங்கிய கழிவுநீர்

Update: 2026-07-26 15:34 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கந்தசாமிபுரம் சாலையில் கழிவுநீர் அதிகளவில் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மற்றும் சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள் , வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் தேங்கிய கழிவுநீரை அப்புறப்படுத்தவும், கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்து தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்