சேலம் ஏ.வி.ஆர். டவுண்டானா பகுதியில் ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களின் கழிவுகளை அதே பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கொட்டுகின்றனர். இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுகள் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாயில் ஓட்டல் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.