கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2026-07-26 16:32 GMT
ஒட்டன்சத்திரம் தாலுகா சிந்தலப்பட்டி கிராமத்தில் அருந்ததியர் காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்