தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-07-26 15:02 GMT

ஈரோடு நேதாஜி நகர் பத்ரகாளியம்மன் கோவில் வீதியில் இரு புறங்களிலும் உள்ள சாக்கடை கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சாக்கடை கால்வாயில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சாக்கடை கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர். எனவே நேதாஜி நகர் பத்ரகாளியம்மன் கோவில் வீதியில் சாக்கடை கால்வாயை தூர்வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்