திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் ஹரிச்சந்திராபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பிள்ளைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி அருகில் கழிவு நீர் கால்வாய் இருப்பதால், துர்நாற்றம் வீசிவதோடு குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்வேண்டும்.