திருவண்ணாமலை புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகங்களை மக்கள் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் அவை சுத்தம் இல்லாமல் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கமல், திருவண்ணாமலை.