துர்நாற்றம் வீசும் கழிவுநீர் கால்வாய்

Update: 2025-03-30 20:05 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாம்பாக்கம் கிராமத்தில் செய்யாறு-ஆரணி சாலையோரம் உள்ள கால்வாயில் கழிவுநீர் வெளியே செல்ல வழி இல்லாததால் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீரை வெளியேற்ற வழிவகை செய்ய வேண்டும்.

-சர்மா, மாம்பாக்கம்.

மேலும் செய்திகள்