அரக்கோணம்-திருத்தணி ரோட்டில் உள்ள வடமாம்பாக்கம் ஊராட்சி பாப்பான் குளம் பகுதி அரசு தொடக்கப் பள்ளி அருகே மழை நீர் கால்வாயில் கழிவு நீர் வெளியேறாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதே போல் தணிகைபோளூர் ஊராட்சிக்கு உட்பட்ட சக்தி நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைச் சுற்றிலும் கழிவு நீர் செல்கிறது. இதனால், கொசு மற்றும் பூச்சிகள் அதிகளவில் உருவாவதோடு சக்திநகர் பொது மக்கள் குடிநீர் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில்முருகன், சமூக ஆர்வலர், நாகாலம்மன் நகர், அரக்கோணம்.