குடியாத்தம் ஒன்றியம் மூங்கப்பட்டு ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் பாலம் உடைந்து சேதம் அடைந்துள்ளது. அந்தப் பாலத்தைப் புதிதாக அமைத்துத்தர பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் பாலத்தைப் புதிதாகக் கட்டித்தருவார்களா?
-ஜி.தமிழ், மூங்கப்பட்டு.