காட்பாடி கழிஞ்சூர் ரோடு பஸ் நிறுத்தம் எதிரே பெட்ரோல் பங்க் சுற்றுச்சுவரையொட்டி உள்ள கால்வாயில் கழிவுநீர் சரியாக ஓடாததால் சாலையில் வழிந்தோடி காங்கேயநல்லூர் சாலையில் உள்ள ஒரு வங்கி வாசலில் குளம்போல் தேங்குகிறது. பெட்ரோல் பங்க் சுற்றுச்சுவரையொட்டி உள்ள கால்வாயை சரி செய்து கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அப்துல்நசீர், காங்கேயநல்லூர் ரோடு.