வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட பழைய பஸ் நிலையம் அருகில் கழிவுநீர்கள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் தினமும் சுத்தம் செய்வது இல்லை, பிளீச்சிங் பவுடர் போடுவதும் இல்லை. தினமும் மக்கள் பல கிராமங்களில் இருந்து வந்தவாசி நகருக்கு வந்து பஸ் ஏறுவதற்காக பஸ் நிலையம் வந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். அந்த அளவுக்கு துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனே நகராட்சி நிர்வாகம் கழிவுநீரை அகற்றி சுத்தம் செய்து நோய் பரவுவதை தடுக்க வேண்டும்.
-எம்.ஜெயக்குமார், சமூக ஆர்வலர், விழுதுபோட்டு கிராமம்.