கே.வி.குப்பத்தை அடுத்த பசுமாத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாலாற்றுப் பகுதியில் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் இருந்து வெளியேறும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆற்று நீருடன் கலந்து பல ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் குடிநீர் உப்பு நீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது. ஆற்றில் துணிகளை துவைத்து அணிதல், குளித்தல் ஆகியவற்றால் தோல் நோய் வரும் அபாயம் உள்ளது. எனவே, பாலாற்றில் கலக்கும் கழிவுநீரை தடுத்து நிறுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமசாமி, பசுமாத்தூர்.