வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் வந்தவாசி-ஆரணி நெடுஞ்சாலையில் அரசு நடுநிலைப் பள்ளி அருகே கழிவுநீர் தேங்கி ெகாசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மழைப் பெய்தால் கழிவுநீரும், மழைநீரும் கலந்து சாலையில் ஆறாக ஓடுகிறது. அந்த நீரில் நீந்தி தான் வாகனங்கள் சென்று வருகின்றன. கழிவுநீர் கால்வாயை தூர்வாரி, கால்வாய் சுவரை சற்று உயர்த்தி கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
-எஸ்.சுரேஷ், சமூக ஆர்வலர், சென்னவரம்.