வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு மியன்னா காதர்ஷா 2-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலையில் ஓடி தேங்கி உள்ளது. சாலையில் செல்லும் கழிவு நீரால் பலவித நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும்.
-எஸ்.எம்.ஆனந்த், வந்தவாசி.