வேலூர் மக்கான் அருகே காட்பாடி செல்லும் சாலையில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் வெளியேறி சாலையில் வழிந்து ஓடுகிறது. அப்பகுதி மக்கள் அந்த வழியாக சிரமத்துடன் செல்கின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் செல்லும் கழிவு நீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன்,வேலூர்.