ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் கால்வாய்கள் பெரும்பாலும் தூர்வாரப்படாமல், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் பகுதியாக மாறி வருகிறது. அதில் ஆரணி-தேவிகாபுரம் நெடுஞ்சாலை, தச்சூர் சாலை, தலைமை தபால் நிலையம் முன்பாக உள்ள கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி உள்ளது. கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், ஆரணி.