உடுமலை வடக்கு குட்டை வீதியில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாக்கடையில் தொட்டி சேதமடைந்து குழிபோல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீேழ விழுந்து விடுகிறார்கள். இதேபோல் நடந்து செல்லும் பொதுமக்களும் அவ்வப்போது கீழே விழும் நிலை உள்ளது. எனவே பேராபத்துகள் ஏற்படும் முன், பாதாள சாக்கடையை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?
சபரீஸ், உடுமலை.