மதுரை 72-வது வார்டு பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் 8-வது தெருவில் கடந்த சிலநாட்களாக கழிவு நீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றது. இதில் எழும் துர்நாற்றத்தால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மற்றும் அச்சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.