தேனியை அடுத்த அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கால்வாயை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. எனவே சாக்கடை கால்வாயை விரைந்து தூர்வாருவதுடன், புதர்களையும் அகற்ற வேண்டும்.