பழனி அடிவாரம் பாரதிநகர் பகுதியில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலத்தில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து தெருவில் தேங்குகிறது. மேலும் கால்வாயில் வீசப்படும் குப்பைகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடையை முறையாக தூர்வாருவதுடன், குப்பைகளை வீசாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.