பாப்பான்குளம் ஊராட்சி ரெட்டிபாளையம் கருப்பணசாமி கோவில் வீதியில் இருந்து கழிவு நீர் வெளியேறி, சாலையின் ஓரத்தில் தேங்கி நிற்கிறது. இந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போது, கழிவு நீர் தெறித்து சிதறுகிறது. மேலும், சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, கழிவு நீர் தேங்கி நிற்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.