கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு

Update: 2026-03-01 16:34 GMT

திருச்சி ரெயில் நிலையம் எதிரே உள்ள சாலையில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வழிவிடு முருகன் கோவில் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனை அவ்வப்போது மாநகராட்சி ஊழியர்கள் வந்து சரி செய்து விட்டு செல்கின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன், நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்