துர்நாற்றம் வீசுகிறது

Update: 2026-03-01 13:53 GMT

ஏரியூர் அருகே உள்ள சுஞ்சல் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட தின்ன பெல்லூரில் பிரதான சாலையிலேயே கழிவுநீர் ஆறு போல ஓடுகிறது. பென்னாகரம்- நாகமரை பிரதான சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஊரில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீரை பிரதான சாலையிலேயே விடுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகுந்த வேதனையுடன் கடந்து செல்கின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுக்கள் உருவாகி, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்