கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் வேலுமணி நகர் அய்யப்பாநகர் பார்க் அருகே உள்ள பசுமை நகரில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தெருவில் ஆறு போல் ஓடி வருகிறது. துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே பசுமை நகரில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.