வாறுகால் சீரமைக்கப்படுமா?

Update: 2025-12-28 15:21 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஒட்டம்பட்டி தெருவில் உள்ள கழிவுநீர் வாருகால் சேதம் அடைந்து உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் குளம் போல் தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம்  உள்ளதால் சேதமடைந்த வாறுகாலை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்