பள்ளிபாளையம் அருகே வெப்படை சக்தி நகரில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடியில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகிறார்கள். அங்கன்வாடியை ஒட்டி செல்லும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரததால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக அங்கு வரும் குழந்தைகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து பெற்றோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. எனவே சாக்கடை கால்வாயை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், பள்ளிபாளையம்.