சுகாதார சீர்கேடு

Update: 2025-09-28 15:38 GMT

நாமக்கல் மாவட்டம் உஞ்சனை கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி பாதியிலே நிறுத்தப்பட்டது. இதனால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இது பற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-உதயசங்கர், உஞ்சனை.

மேலும் செய்திகள்