சுகாதார சீர்கேடு

Update: 2025-09-28 15:35 GMT

மாரண்டஅள்ளி அடுத்த அத்திமுட்லு ஊராட்சிக்கு உட்பட்ட மையப் பகுதியில் குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியை சுற்றி கழிவுநீர் சூழ்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது பற்றி பலமுறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

-ரவிச்சந்திரன், அத்திமுட்லு.

மேலும் செய்திகள்