சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2025-09-28 15:30 GMT

ஓசூரில், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் அருகே மிகவும் பழமையான பண்டாஞ்சநேயர் கோவில் உள்ளது. மேலும் இந்த பகுதியில் ஓட்டல்கள், வணிக வளாகங்கள், இரு சக்கர வாகன ஷோரூம்கள், கடைகள் தனியார் வங்கிகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் கோவிலின் எதிரே சர்வீஸ் சாலையில் மழைக்காலங்களில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயேந்திரன், ஓசூர்.

மேலும் செய்திகள்