தர்மபுரி நகரில் உள்ள பெரும்பாலான சாக்கடைகளில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நேதாஜி பைபாஸ் ரோடு, நாச்சியப்ப கவுண்டர் தெரு, பென்னாகரம் மெயின் ரோடு உள்ளிட்ட பிரதான சாலைகளில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் தினமும் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை வெள்ளத்தோடு சாக்கடை கழிவுநீர் கால்வாயும் கலந்து ஓடுவதால் பொதுமக்கள் சாலைகளில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சாக்கடை கால்வாய்களை தூர்வருமா?
-முனுசாமி, காந்திநகர், தர்மபுரி.