ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி காமராஜ் நகரில் இருந்து சின்னத்தள்ளப்பாடி செல்லும் வழியில் நிழற்கூடம் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள சாக்கடை கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்களும், புழுக்களும் அதிகரித்து இப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வார போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாமிநாதன், மிட்டப்பள்ளி.