நோய் பரவும் அபாயம்

Update: 2025-09-21 10:44 GMT

நாமக்கல் மாநகரை சுற்றிலும் புறவழிச்சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதையொட்டி கூலிப்பட்டி பகுதியில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்திற்கு அருகில் மழைநீர் வெளியேறும் வடிகால் சிறியதாக இருப்பதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் குடியிருப்பு பகுதியை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி இருப்பதால், கொசு உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

-ஊர் பொதுமக்கள், கூலிப்பட்டி.

மேலும் செய்திகள்