நிறைவு பெறாத கால்வாய் பணி

Update: 2025-09-07 12:25 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட குழிக்கடவு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையானது சன்னகொல்லி, தட்டாம்பாறை பகுதிகளுக்கு செல்லும் இணைப்பு சாலையாக உள்ளது. இந்த சாலை ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் பணிகள் நிறைவு பெறாமல் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் மழைநீர், கழிவுநீர் சாலையில் வழிந்ேதாடுகிறது. இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே கால்வாயை முழுமையாக கட்டி முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்