கோவை பி.என்.புதூர் இந்திரா காந்தி வீதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் மண், குப்பைகள் நிறைந்து கிடக்கிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அந்த சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.