பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2025-08-24 12:21 GMT

கிருஷ்ணகிரி நகராட்சியில் காந்தி சாலையில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் குடியிருப்பு, கடைகளுக்கு செல்லும் பாதை முழுவதும் தோண்டப்பட்டு உள்ளன. இந்த பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் வணிகர்களும் தங்களின் வியாபாரத்தை செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோபால், காந்தி சாலை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்