கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2025-08-24 10:28 GMT

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தின் முகப்பு பகுதியில் இரண்டு கழிப்பிடங்கள் உள்ளன. இதில் ஒரு கழிப்பிடத்தில் மின்விளக்குகள் எரியாமல் இருக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் பயணிகள் கழிப்பிடத்தை பயன்படுத்தும் போது பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதேபோல் இங்கு பெண்களுக்கான கழிவறை இழுத்து பூட்டப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்கள் கழிப்பிடத்தை தேடி அலையும் நிலை உள்ளது. எனவே பூட்டப்பட்டு கிடக்கும் கழிப்பிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோமன், திருப்பூர்.

மேலும் செய்திகள்