நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர் ஊராட்சி ஒன்றியம் நெட்டவேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியை ஒட்டி கழிவுநீர் குட்டை உள்ளது. துர்நாற்றம் வீசியும் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகள் படிக்கும் தொடக்கப்பள்ளி என்பதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக கழிவுநீர்குட்டையை மூடி கழிவுநீர் வாய்க்கால் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் வேண்டும்.
-குமார், நெட்டவேலம்பாளையம்.