நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு அம்பேத்கர் நகர் மதுரை வீரன் கோவில் வீதியில் பல ஆண்டுகளாக சாக்கடை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. தெரு மற்றும் வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. புகார் அளித்தும் பலனில்லை. பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுப்பார்களா?
-செல்வா, நாமகிரிப்பேட்டை.