பராமரிக்கப்படாத கால்வாய்

Update: 2025-08-10 17:28 GMT

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை அருகே ஆலவயல் பகுதியில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்காமல் உள்ளது. பல இடங்களில் தடுப்பு சுவர்கள் இல்லாததால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் தவறி கால்வாயில் விழும் நிலை காணப்படுகிறது. கழிவுநீர் சீராக வழிந்தோட வழியில்லாமல் தேங்கி காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்