சேலம் அழகாபுரம் மிட்டாபுதூரில் உள்ளது ரேகா காலனி. இந்த காலனியின் சாக்கடை கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாலையில் கழிவுநீர் செல்கிறது. இந்த கழிவுநீரால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்த பகுதியில் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், ரேகா காலனி, சேலம்.