சுகாதார சீர்கேடு

Update: 2025-08-03 17:04 GMT

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பட்டி அரசு மாணவி விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வசதியில்லாததால் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் சாலையிலும் கழிவுநிர் வழிந்து ஓடுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் கழிவுநீர் கால்வாய் ஏற்படுத்த வேண்டும்.

-தென்றல், பாப்பிரெட்டிப்பட்டி.

மேலும் செய்திகள்