மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி சந்தைப்பேட்டையில் நீண்ட நாட்களாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை சீரமைக்க இப்பகுதி மக்கள் பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த கழிவுநீர் கால்வாயையொட்டி குடிநீர் குழாய் உள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சேதமடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைத்து அதன் மேல் சிமெண்டு சிலாப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகம், மாரண்டஅள்ளி.