ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே ஓட்டல்கள், பேக்கரிகள், கடைகள் அதிகளவில் உள்ளன. மேலும் கோர்ட்டு, தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகங்களும் சிலைக்கு எதிரே உள்ளன. இந்த நிலையில் அண்ணா சிலைக்கு பின்புறம் உள்ள சாக்கடையில் நீண்ட நாட்களாக கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் நடமாடுவதற்கே பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த கால்வாயை உடனடியாக தூர்வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆர்.சண்முகம், ஓசூர்.