பர்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டில் பாரத மாதா கோவில் உள்ளது. இந்த பகுதியில் 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு உள்ள கழிவுநீர் கால்வாய் சிதிலமடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதில் வரும் கழிவுநீர் வெளியேற வழி இல்லாததால் தெருக்களில் ஆறாக செல்கிறது. மேலும் அந்த கழிவுநீரில் பிளாஸ்டிக் கழிவுகளும் கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.
-பாலமுருகன், பர்கூர்.