சேலம் சொர்ணபுரி கலைமகள் தெருவில் அங்குள்ள ஒரு ஓட்டல் முன்பு பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இந்தநிலை கடந்த சில மாதங்களாக உள்ளது. இதனால் அப்பகுதி பாசி படர்ந்து இருப்பதால் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் அதில் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி பாதாள சாக்கடையில் ஏற்பட்டு உள்ள அடைப்பை சரி செய்தால் சாலையில் கழிவுநீர் ஓடுவதை தவிர்க்கலாம்.
-அப்துல்லா, சேலம்.