கோவை மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்ட ஒண்டிபுதூர் சுங்கம் மைதானம் அருகே மதுரை வீரன் கோவில் வீதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சுகாதாரமான குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆவன செய்ய வேண்டும்.