
எலத்தூர் பேரூராட்சி தெற்குப்பதி பஸ் நிறுத்தம் அருகே செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?