Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Nov 2024 3:16 PM GMT
Mr.T.Rathinavel | மொடக்குறிச்சி
#51448

தார்சாலை அமைக்கப்படுமா?

தார்சாலை அமைக்கப்படுமா?சாலை

கொடுமுடியை அடுத்த தாமரைபாளையம் அருகில் ஈரோடு கரூர் மெயின் ரோட்டில் லட்சுமிபுரத்தில் இருந்து குமரப்பபுரம் வரை 1 கிலோ மீட்டர் தூரம் வரை தார் சாலை அமைக்க ரூ.22 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதைத்ெதாடர்ந்து அதற்கான பணிகள் தொடக்க விழா கடந்த கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. மேலும் அங்கு ஏற்கனவே இருந்த தார் சாலை முழுவதும் அகற்றப்பட்டது. ஆனால் பணி நடக்காமல் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் அந்த சாலை முழுவதும் கற்களாக சிதறி கிடக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள், மாணவ- மாணவிகள் நடந்து செல்ல முடியாமல்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024 3:45 PM GMT
Mr.T.Rathinavel | அந்தியூர்
#46325

அடிக்கடி விபத்து

அடிக்கடி விபத்துசாலை

அந்தியூர் அருகே சங்கராபாளையம் சுமைதாங்கி பகுதியில் இருந்து குருநாதசாமி வனக்கோவில் செல்லும் பாதை மிகவும் பழுதடைந்துள்ளது. ஜல்லிகள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு உள்ளன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஜல்லிகளில் பட்டு தட்டுத்தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி ஜல்லிகற்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 3:45 PM GMT
Mr.T.Rathinavel | ஈரோடு மேற்கு
#44937

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டுக்குட்பட்ட மோளகவுண்டன்பாளையம் கல்யாணசுந்தரம் வீதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உடனே குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 6:01 PM GMT
Mr.T.Rathinavel | ஈரோடு மேற்கு
#44278

தேங்கி நிற்கும் கழிவுநீர்

தேங்கி நிற்கும் கழிவுநீர்கழிவுநீர்

ஈரோடு கணபதி நகர் 2-வது வீதியில் உள்ள பாதாள சாக்கடையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவு நீர் வெளியேறி வீடுகளின் முன்னால் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தொற்றுநோய் ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. உடனே பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:47 PM GMT
Mr.T.Rathinavel | அந்தியூர்
#44276

வேகத்தடை அமைக்க வேண்டும்

போக்குவரத்து

டி.என்.பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட புள்ளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஏலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்த பள்ளி இருக்கும் வீதி வழியாக ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பள்ளி நேரங்களில் அதிக வேகத்துடன் சென்று வருகின்றன. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த பள்ளியை ஒட்டி வேகத்தடை அமைத்து வாகன விபத்து ஏற்படாத வண்ணம் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:44 PM GMT
Mr.T.Rathinavel | அந்தியூர்
#44273

ஆபத்தான.மின்கம்பம்

ஆபத்தான.மின்கம்பம்மின்சாரம்

அந்தியூர் தாலுகா பிரம்மதேசத்தில் அந்தியூர்-ஆப்பக்கூடல் மெயின் ரோட்டில் உள்ள பெத்தாரண்ணன் கோவில் பஸ் நிறுத்தத்தின் அருகே மின்கம்பம் உள்ளது. இங்குள்ள மின்கம்பத்தில் அடிப்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. தினமும் காலை, மாலையில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறி சென்று வருகிறார்கள். ஏதாவது அசம்பாதவித சம்பவம் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:39 PM GMT
Mr.T.Rathinavel | கோபிச்செட்டிப்பாளையம்
#44268

பயணிகள் அச்சம்

போக்குவரத்து

கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் மிகவும் வேகமாக சென்று வருகின்றன. இதனால் பயணிகள் பஸ் நிலையத்துக்குள் செல்ல முடியாமல் அச்சப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்கள் செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:36 PM GMT
Mr.T.Rathinavel | அந்தியூர்
#44266

பஸ் நின்று செல்ல வேண்டும்

போக்குவரத்து

அந்தியூர் அருகே உள்ள பழைய மேட்டூர் பஸ் நிறுத்தம் வழியாக 20பி என்ற அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளை ஏற்றி செல்வதில்லை. இதனால் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு உரிய நேரத்தில் அவர்களால் செல்ல முடிவதில்லை. எனவே பழைய மேட்டூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:30 PM GMT
Mr.T.Rathinavel | அந்தியூர்
#44261

சமூக விரோதிகள் நடமாட்டம்

மற்றவை

அந்தியூர் தெற்கு சந்தை நுழைவுவாயில் எதிரே தினமும் இரவு சமூக விரோதிகளின் நடமாட்டம் காணப்படுகிறது. அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறிக்கிறார்கள். உடனே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 2:41 PM GMT
Mr.T.Rathinavel | அந்தியூர்
#43678

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

அந்தியூர் அருகே பூனாச்சி சக்தி நகர் முதல் தெருவில் மின்கம்பம் உள்ளது. இது சில ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. மழை பெய்யும்போது மின்ஒயரில் இருந்து தீப்பொறி பறக்கிறது. இதனால் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி வேறு மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு

அந்தியூர் அருகே பூனாச்சி சக்தி நகர் முதல் தெருவில் மின்கம்பம் உள்ளது. இது சில ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. மழை பெய்யும்போது மின்ஒயரில் இருந்து தீப்பொறி பறக்கிறது. இதனால் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி வேறு மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 4:27 PM GMT
Mr.T.Rathinavel | பவானி
#37391

சீரான மின்வினியோகம்

மின்சாரம்

ஈரோடு அருகே உள்ள ஆர்.என்.புதூர் கே.கே.கார்டன் மேற்கு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக மின்சாரம் வினியோகிக்கப்படவில்லை. இதனால் வீட்டு மின் மோட்டார் இணைப்புகள் சரியாக பயன்படுத்த முடியவில்லை. தற்போது வீடுகள் அதிகரித்துள்ளதால் கூடுதலாக மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் ஒரே ஒரு டிரான்ஸ்பார்மர் இருப்பதால் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே கூடுதலாக ஒரு டிரான்ஸ்பார்மர் அமைத்து சீராக மின்வினியோகம் செய்ய அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 3:10 PM GMT
Mr.T.Rathinavel | அந்தியூர்
#33675

பயன்பாடின்றி தண்ணீர் தொட்டி

பயன்பாடின்றி தண்ணீர் தொட்டிமற்றவை

அந்தியூர் சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுமேட்டூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் தொட்டி பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. சுவர் விளம்பரம் செய்யும் சுவராக மாறியுள்ளது. சரியாக வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதில்லை. 2 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி சிரமப்படுகிறார்கள். எனவே பயன்பாட்டில் இல்லாத இந்த தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick